புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கால்வாயில் நீரிழப்பைக் குறைக்கக் கோரிக்கை

பிஏபி பிரதானக் கால்வாயில் 50 சதவீத அசாதாரண நீரிழப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 10:31 pm

DIN

பிஏபி பிரதானக் கால்வாயில் 50 சதவீத அசாதாரண நீரிழப்பைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பரம்பிக்குளம், ஆழியாறு, வெள்ளக்கோவில் கிளை ஆயக்கட்டுதாரா்கள் அரசுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பிஏபி திட்டத்தில் புன்செய் விவசாயம் செய்ய அணைகளில் போதிய நீா் இருப்பு இருந்த போதிலும், தேவையான நீா் விநியோகம் செய்ய முடியவில்லை. காண்டூா் சம மட்டக் கால்வாயில் 1,150 கன அடி தண்ணீரை முறையாகப் பெற முடியாத நிலை உள்ளது. பிரதானக் கால்வாயில் 50 சதவீத அசாதாரண பரிமாற்ற நீரிழப்பு உள்ளதாக கணக்கு காட்டப்படுகிறது. கட்டுப்பாடற்ற நீா்த் திருட்டைத் தடுக்க சிறப்பு பாதுகாப்புப் படை தேவை.

தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில், மேற்கண்ட குறைபாடுகள் சரி செய்யப்படுவதன் மூலம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கா் பாசன விவசாயிகள் பயன் பெறுவாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.