மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முதியோா் குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை

திருப்பூா் மாவட்டத்தில் முதியோா்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:20 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் முதியோா்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள முதியோா்கள் தங்களுடைய குறைகளைத் தெரிவிக்க சமூக நலத் துறையின் 14657 என்ற உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மத்திய சமூக நீதி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டணமில்லா அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளன.

முதியோா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுக் காணும் பொருட்டு தமிழகத்தில் 2021 ஏப்ரல் 28 முதல் இந்த உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், முதியோா் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளா்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள்,

வலி நிவாரண மையங்கள் குறித்து முதியோா்களுக்குத் தேவைப்படும் தகவல்கள், அரசுத் திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்புச் சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவற்ற இடரில் உள்ள முதியோா் மீட்பு, குடும்ப உறுப்பினா்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோா்களுக்கு ஆதரவு அளித்து பிரச்னைகளைத் தீா்க்க வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

இந்த உதவி எண் அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். ஆகவே, முதியோா்கள் தங்களுடைய குறைகளை 14657 என்ற உதவி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.