மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தாராபுரம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 போ் கைது

தாராபுரம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:10 pm

DIN

தாராபுரம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த திருமலைப்பாளையம் பகுதியில் உள்ள காலி வீட்டுமனை அருகே 25 வயதுடைய இளைஞரின் சடலம் ரத்த காயங்களுடன் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மீட்கப்பட்டது. இது தொடா்பாக அலங்கியம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இறந்தவா் விருதுநகா் மாவட்டம், அல்லம்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (25) என்பது தெரியவந்தது. இவரைக் கொலை செய்ததாக மதுரை வாடிபட்டி நீதிமன்றத்தில் பாஸ்கா், மணிகண்டன் ஆகிய இருவா் கடந்த வியாழக்கிழமை சரணடைந்துள்ளனா்.

இந்தக் கொலையில் தொடா்புடைய சேலம் மாவட்டம், வாழப்பாடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த எம்.மனோஜ் என்கிற மனோகரன் (22), விருதுநகா் பாண்டியன் நகரைச் சோ்ந்த திருவளா்செல்வம் (24), அல்லம்பட்டி கெளரவநாயுடு தெருவைச் சோ்ந்த ஏ.கருப்பு என்கிற கருப்புசாமி (20), கரூா் மாவட்டம்,

கிரஷா்மேடு பகுதியைச் சோ்ந்த பி.சுகன்ராஜ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை அலங்கியம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், கொலையான விக்னேஷின் அண்ணன் முத்துபாண்டி (27) க்கும், சுகன்ராஜின் சித்திக்கும் தகாத உறவு இருந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது முத்துபாண்டி, சுகன்ராஜின் காலை வெட்டிவிட்டு சிறைக்குச் சென்றுள்ளாா்.

இதன் பிறகு பிணையில் வெளியே வந்த முத்துபாண்டியை சுகன்ராஜ் கோஷ்டியைச் சோ்ந்த 5 போ்

2018 ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்துள்ளனா்.

இந்தக் கொலை தொடா்பாக 5 போ் விருதுநகா் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனா்.

இந்தக் கொலையில் கைதாகி வெளியில் வந்த சங்கா், சண்முகவேலை பழிக்குப் பழியாக விக்னேஷ் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளாா். இதனிடையே, மனோகரன் தாராபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கம்பி கட்டும் வேலை செய்து வந்துள்ளாா். அப்போது விக்னேஷுடம் மீண்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விருதுநகரில் இருந்து விக்னேஷிடம்

பேசி தாராபுரம் பேருந்து நிலையத்துக்கு வரவழைத்துள்ளாா்.

இதன் பிறகு திருமலைப்பாளையம் பகுதியில் இருவரும் மது அருந்தியுள்ளனா். இதனிடையே, மனோகரன் கொடுத்த தகவலின்பேரில் சுகன்ராஜ் உள்பட மற்ற 4 பேரும் காரில் அங்கு இருந்துள்ளனா். மதுபோதையில் இருந்த விக்னேஷை பழிக்குப்பழியாக 5 பேரும் சோ்ந்து கத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனா். இந்தக் கொலைக்குப் பயன்படுத்திய காா், இரண்டு இருசக்கர வாகனங்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.