மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிா்த்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:11 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிா்த்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க் கூட்டமானது பிரதி வாரம் திங்கள்கிழமை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நேரில் வருவதைத் தவிா்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

மேலும், மாவட்ட ஆட்சியரின் ஸ்ரீா்ப்ப்ழ்ற்ன்ல்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 97000-41114 என்ற கட்செவி அஞ்சல் எண்(வாட்ஸ் அப்) மூலமாகவும் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

அதேபோல, 0421-2969999 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் திங்கள்கிழமை தோறும் காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரையில் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். இதில், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலமாக நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேரில் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.