பொது சுகாதாரத்துறையிலேயே பதவி உயர்வு வழங்க ஆய்வகநுட்புனர்கள் கோரிக்கை
பொது சுகாதாரத்துறையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொது சுகாதாரத்துறையிலேயே பதவி உயர்வு வழங்க ஆய்வகநுட்புனர்கள் கோரிக்கை

பொது சுகாதாரத்துறையிலேயே பதவி உயர்வு வழங்க ஆய்வகநுட்புனர்கள் கோரிக்கை
பொது சுகாதாரத்துறையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் சங்க மண்டல ஆலோசனை கூட்டம் அவிநாசி அரசு அலுவலக ஒன்றிய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்க மாநிலத் தலைவர் கார்த்திகேய வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொருளாளர் இராமச்சந்திரன் பேசினார். இதில், மருத்துவ ஆய்வக நுட்புனர்களுக்கு பொது சுகாதாரத்துறையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும். அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிச் சுமையை குறைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் வழிகாட்டுதலின்படி ஒன்றியத்துடன், இணைந்து செயல்படுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய பொறுப்பாளர்களாக மாவட்ட தலைவர் மோகன்ராஜ், துணைத் தலைவர் முனீஸ்வரன், மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, இணை செயலாளர் சமாதானம், மாவட்ட பொருளாளர் கார்த்தியாயினி, ஒருங்கிணைப்பாளர் கேசவன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...