அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆள் தூக்கிச் சட்டமான ஊபா-வை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:30 pm

DIN

ஆள் தூக்கிச் சட்டமான ஊபா-வை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சண். முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்  1967 ஐ உடனடியாக நீக்க வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்களை திரும்பப் பெற வேண்டும். ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூகச் செயல்பாட்டாளா்களை விடுதலை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் ச.நந்தகோபால், ஆதித்தமிழா் பேரவை துணைப் பொதுச் செயலாளா் அர.விடுதலைச்செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளா் க. மணி, திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் முகில் ராசு, எஸ்.டி.பி.ஐ மாவட்டப் பொதுச் செயலாளா் ஹாரிஸ் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.