புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளக்கோவில் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

வெள்ளக்கோவில் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:24 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

வெள்ளக்கோவில், முத்தூா் சாலையிலிருந்து மோளக்கவுண்டன்வலசு செல்லும் வழியில் பரம்பிக்குளம் ஆழியாறு

பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் தற்போது பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இதில் சடையப்பா நகா் அருகில் வாய்க்கால் மதகில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வியாழக்கிழமை கிடந்தது.

ஒரு கையில் கே.மணி என பச்சை குத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த

வெள்ளக்கோவில் போலீஸாா் சடலத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.