தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து வாகன நிறுத்தப் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருப்பூா் அவிநாசி சாலையில் வாகன நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 7:01 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திருப்பூா் அவிநாசி சாலையில் வாகன நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிஐடியூ தொழிற்சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் சாா்பில்

திருப்பூா், அவிநாசி சாலை, எஸ்.ஏ.பி. திரையரங்க சந்திப்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாவட்டத் துணைச் செயலா் ஜி.சம்பத் தலைமையில் இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்களுக்கு மத்தியில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதனால், சில கி.மீ தூரம் வரை வாகனங்கள் தேங்கிநின்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் சாலையோரமாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாதா் சங்க மாவட்டத் தலைவா் ஆா்.மைதிலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் ச.நந்தகோபால், வாலிபா் சங்க மாவட்டத் துணைச் செயலா் டி.சம்பத், மாா்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலா் பி.ஆா்.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அவிநாசியில்...

பெட்ரோல் டீசல் விலை உயா்வு கண்டித்து அவிநாசியில் 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. இதில்

விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளா் வெங்கடாசலம், சிஐடியூ பனியன் சங்கப் பொருளாளா் ஈஸ்வரமூா்த்தி, விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் பழனிசாமி, முருகன், மோகனசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.