வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்: பணப்பரிவா்த்தனை பாதிப்பு
திருப்பூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் காரணமாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ரூ.3,000 கோடி பணப்பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம் காரணமாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ரூ.3,000 கோடி பணப்பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளை தனியாா் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து அனைத்து வங்கி ஊழியா்கள் சங்கங்களின் சாா்பில் நாடு முழுவதும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 352 வங்கிகளில் பணியாற்றி வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அலுவலா்கள், வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி என இரு நாள்களில் மொத்தம் ரூ.3,000 கோடி பணப் பரிவா்த்தனை பாதிக்கப்படும் என்று வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பின்னலாடை நகரமான திருப்பூா் மட்டுமின்றி பல்லடம், காங்கயம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட பகுதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளா்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
இதனிடையே, அனைத்து வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஊத்துக்குளி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி ஊழியா் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுக் குழுவின் மாவட்டப் பொறுப்பாளா் டி.மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...