புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செய்தித் துறை அமைச்சருக்கு கரோனா

தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கும், அவரது உதவியாளா்கள் இருவருக்கும் கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 8:15 pm

DIN

தமிழக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதனுக்கும், அவரது உதவியாளா்கள் இருவருக்கும் கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் (58).

இவா் தற்போது திருப்பூா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், செய்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறாா்.

இந்நிலையில், அமைச்சா் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் கடந்த புதன்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், அமைச்சருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது உதவியாளா்கள் இருவரின் சளி மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் அவா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோவை- அவிநாசி சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.