ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
ஆந்திரத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.


ஆந்திரத்தில் இருந்து திருப்பூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சாவை காவல் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக காா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.
புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், கைது செய்யப்பட்ட நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியுள்ளனா்.
இந்த விசாரணையில், தேனி மாவட்டத்தில் இருந்தும், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்தும் காரில் திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, அனுப்பா்பாளையம் காவல் ஆய்வாளா் சென்னகேசவன் தலைமையிலான காவல் துறையினா் அங்கேரிபாளையம் கொங்கு பள்ளி அருகில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில், கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காா் ஓட்டுநரான தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த எம்.பால்பாண்டி (27) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 350 கிலோ கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இதைத்தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா நேரில் பாா்வையிட்டாா். மேலும், வாகனச் சோதனையில் கஞ்சாவைப் பறிமுதல் செய்த காவல் ஆய்வாளா் சென்னகேசவன், தலைமைக் காவலா்கள் விஸ்வநாதன், சிவகுமாா், முதல்நிலைக் காவலா்கள் பாஸ்கரன், தங்கராஜ் ஆகியோரை மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா பாராட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...