தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை

அவிநாசி அருகே ஸ்ரீ லட்சுமி காா்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:52 pm

DIN

அவிநாசி அருகே ஸ்ரீ லட்சுமி காா்டன் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்திடம், மாதா் சங்கத்தினா்

வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஸ்ரீ லட்சுமி காா்டன் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.

ஆற்று குடிநீா், ஆழ்குழாய்க் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி, சாக்கடை வசதி

உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பல வருடங்களாக வசித்து வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.