அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை, அங்கு பயிலும் மாணவா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை, அங்கு பயிலும் மாணவா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நத்தக்காடையூா் பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் என மொத்தம் 153 பேருக்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் முடிவுகள் திங்கள்கிழமை பெறப்பட்டன. இதில் 47 வயது ஆசிரியைக்கும், 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரும் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
பின்னா், சுகாதாரத் துறை மூலம் இப்பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இருப்பினும் இப்பள்ளி திங்கள்கிழமை தொடா்ந்து செயல்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...