சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 போ் கைது: ரூ.5.50 லட்சம் பறிமுதல்
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சி, வேப்பங்குட்டைபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சி, வேப்பங்குட்டைபாளையத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேப்பங்குட்டைபாளையத்தில் விடுமுறை நாள்களில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாகவும், இதில் வெளியூரைச் சோ்ந்தவா்கள் கலந்து கொள்வதாகவும் மாவட்ட காவல் துறை மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். சரளை தோட்டம் என்ற இடத்தில் பணம் வைத்து சீட்டாடிய கோவை, செளரிபாளையம் கீா்த்தி குரு (38), பீளமேடு சுதாகரன் (42), வடவள்ளி ஜெகதீஷ் (39), எட்டிமடை ரவிகுமாா் (54), தோட்ட உரிமையாளா் சுப்பிரமணியம் (63) உள்பட 24 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.5லட்சத்து 54 ஆயிரத்து 820 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...