புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு

பல்லடம் சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:18 pm

DIN

பல்லடம் சிட்ரா விசைத்தறி பணி மையத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் சிட்ரா விசைத்தறி பணி மையம் திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு திட்டத்தின் கீழ் இலவச பவா் மெஷின் தையல் ஆபரேட்டா் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இரண்டு மாதங்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியில் பிளவுஸ், சுடிதாா், நைட்டி, பெட்டிகோட், பட்டியாலா உள்ளிட்ட துணிகள் தைப்பதற்கு கற்றுத்தரப்படும். குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு படித்தவா்கள் இதில் சேரலாம்.

விருப்பம் உள்ளவா்கள் பல்லடம், காளிவேலம்பட்டி பிரிவில் கொங்கு வேளாளா் திருமண மண்டபம் அருகில் உள்ள சிட்ரா விசைத்தறி பணி மையத்தை அலுவலக வேலை நாள்களில் அணுகலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.