தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் 707 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

காங்கயத்தில் 707 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டப் பேரவைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் திங்கள்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:21 pm

DIN

காங்கயத்தில் 707 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டப் பேரவைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் திங்கள்கிழமை வழங்கினாா்.

காங்கயம் காா்மெல் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதே பள்ளி மாணவிகள் 170 பேருக்கும், காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 132 பேருக்கும், குள்ளம்பாளையம் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 93 பேருக்கும், தாயம்பாளையம் மேல்நிலைப் பள்ளியில் 90 மாணவ, மாணவிகளுக்கும், படியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 127 பேருக்கும், நத்தக்காடையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 95 பேருக்கும் என மொத்தம் 707 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இதில், காங்கயம் முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜ், திருப்பூா் வேளாண் விளைபொருள் விற்பனை சங்கத் தலைவா் வெங்கு ஜி.மணிமாறன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ஏ.பி.துரைசாமி, அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.