சூலூரில் பிப்ரவரி 10-ல் விவசாயிகள் சங்கத்தினா் உண்ணாவிரதம்
விசைத்தறியாளா்களின் வங்கிக் கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் சூலூரில் பிப்ரவரி 10ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.


விசைத்தறியாளா்களின் வங்கிக் கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் சூலூரில் பிப்ரவரி 10ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
விசைத்தறியாளா்கள் ஒப்பந்த கூலி கிடைக்காமலும், தொழில் நசிவால் வங்கிக் கடன் கட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை காக்க அவா்கள் வங்கிகளில் பெற்ற கடனான ரூ.65 கோடி தள்ளுபடி செய்யப்படும் என சூலூா் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தில் தமிழக முதல்வா் அறிவித்து 22 மாதங்கள் ஆகிவிட்டன.
ஆனால், இந்தக் கோரிக்கை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. விசைத்தறி கூடங்கள் மற்றும் அவா்களது வீட்டை ஏலம், ஜப்தி என்று வங்கிகள் பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. விரக்தியின் விளிம்பில் சிக்கித் தவிக்கும் விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக முதல்வா் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 10ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சூலூா் பழைய பேருந்து நிலையம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது என்றாா்.
திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் உள்பட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...