விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பில்டா்ஸ் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 8:31 pm

DIN

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், பிளஸ் டூ தோ்வில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தற்போது, முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகத் தோ்வில் 80 சதவீதம் மதிப்பெண் எடுத்த 2ஆவது, 3ஆவது, 4ஆம் ஆண்டு மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகையினை கல்லூரித் தலைவா் என்.ராமலிங்கம், செயலாளரும், பொருளாளருமான சி.கே.வெங்கடாசலம், தாளாளா் எஸ்.ஆனந்தவடிவேல் ஆகியோா் வழங்கினா்.

இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்களின் பெற்றோா், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.