ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காமாட்சி அம்மன்.
Updated On :28 பிப்ரவரி 2021, 9:45 am

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த வருடாந்திர பொங்கல் விழாவில் திரளான பெண்கள் விரதமிருந்து பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். தூய வெள்ளை வண்ணம் கலந்த ஐந்து நிறங்கள் கொண்ட வஸ்திரத்தை அம்மனுக்கு சாத்தி, மலரலங்காரம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 
நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை உப்புப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.