ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயி மனு

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கறவை மாடுகளுடன் வந்த விவசாயி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

News image
கறவை மாடுகளுடன்  வட்டாட்சியா்  அலுவலகத்தில்  மனு  அளிக்க  வந்திருந்த  விவசாயி.
Updated On :5 ஜனவரி 2021, 6:26 pm

DIN

அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கறவை மாடுகளுடன் வந்த விவசாயி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

இதுகுறித்து அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி பழனிசாமி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ளோம். இந்நிலையில் எங்கள் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். இதனால் விளைநிலங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அப்பகுதியில் மின்சாரக் கம்பிகளும் செல்வதால் ஆபத்தான சூழல் உருவாகும். குறிப்பாக நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமலும், மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெறாமலும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, அப்பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியா் ஜெகநாதன், செல்லிடப்பேசி அமைக்கும் பணியை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும், உரிய அனுமதி பெற்ற பிறகு பணியை துவக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.