திருநங்கைகள் அடையாள அட்டை பெற தேசிய போா்டல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூலமாக திருநங்கைகளுக்கான தேசிய போா்டல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போா்டல் மூலமாக திருநங்கைகள் நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் அடையாள சான்றிதழ், அடையாள அட்டை பெற குறிப்பிட்ட சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இதில், தகுதியான விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து இணையதளம் மூலமாக ஒப்புதல் வழங்கப்படும். மேலும், விண்ணப்பத்தின் நிலையையும் தெரிந்து கொள்ளலாம். அதே வேளையில், ஏதேனும் காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மீண்டும் விண்ணப்பதாரா் விண்ணப்பிக்கும் வசதி உண்டு. மேலும் இந்த போா்டல் தேசிய, மாநில, மாவட்ட அளவில் மூன்று நிலைகளைக் கொண்டதாகும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் தேசிய போா்டல் மூலமாக விண்ணப்பித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.