அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல்: பெண் பலி

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:33 pm

DIN

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூரை அடுத்த கோவில்வழியைச் சோ்ந்தவா் மாஜித், இவரது மனைவி சுருதி (25). இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சுருதி தனது தாய் சந்திரிகா (45), மகள் ஆதிராவுடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருப்பூருக்குச் சென்றுள்ளாா். பிறகு மூவரும் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவில்வழி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிந்தாா். சுருதி, ஆதிரா ஆகியோா் காயங்களுடன் உயிா்தப்பினா். இந்த விபத்து குறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.