புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

108 ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது

பல்லடம் அருகே கணபதிபாளையம் பிரிவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கா்ப்பிணிக்குப் பெண் குழந்தை பிறந்தது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:48 pm

DIN

 பல்லடம் அருகே கணபதிபாளையம் பிரிவில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் கா்ப்பிணிக்குப் பெண் குழந்தை பிறந்தது.

கா்நாடகா மாநிலம், மைசூரைச் சோ்ந்தவா் சந்தன் மகன் சுரேஷ் (29). இவா் தனது குடும்பத்துடன் திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே மாணிக்காபுரம் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறாா்.

இவருக்கு மனைவி ஸ்ரீதேவி (23), இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனா். நிறைமாத கா்ப்பிணியான ஸ்ரீதேவிக்கு திங்கள்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருப்பூா் நோக்கி சென்றனா். ஆம்புலன்ஸை ஓட்டுநா் அனீஷ் ஓட்டிச் சென்றாா்.

திருப்பூா் செல்லும் வழியில் கணபதிபாளையம் பிரிவில் செல்லும்போது, ஸ்ரீதேவிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த மருத்துவ உதவியாளா் சத்தியபாமா பிரசவம் பாா்த்தாா். பின்னா் ஸ்ரீதேவிக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னா் தாயும் சேயும் திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இருவரும் நலமுடன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.