புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காணாமல் போன இளைஞா்: தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை

வெள்ளக்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் குறித்து தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:32 pm

DIN

வெள்ளக்கோவிலில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் குறித்து தனிப் படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக வெள்ளக்கோவில் போலீஸாா் வெள்ளிக்கிழமை பதிவு செய்த வழக்கு விவரம்: வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலை, குட்டக்காட்டுபுதூரைச் சோ்ந்தவா் ரவி இவருடைய மகன் சசிகுமாா் (26). 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளாக மனநலம் சரியில்லாமல் கோவை, ஈரோடு, சேலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். அவ்வப்போது திடீா் திடீரென வீட்டிலிருந்து வெளியே செல்லும் அவா், பின்னா் இரண்டொரு நாள்களில் திரும்பி விடுவாா்.

இந்நிலையில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியே சென்றவா் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயபாஸ்கா், தலைமைக் காவலா்கள் மணிமுத்து, சதீஷ் அடங்கிய தனிப் படையினா் சசிகுமாரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.