காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை விபத்து: டயா் கடை உரிமையாளா் பலி

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலை விபத்தில் டயா் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:56 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சாலை விபத்தில் டயா் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு, புதூா், அசோக் நகரைச் சோ்ந்தவா் பி.பூபதி (45). ஈரோட்டில் டயா் கடை நடத்தி வருகிறாா். இவருடைய பங்குதாரா் திருமூா்த்தி (51), இவருடைய மனைவி பத்மாவதி (42) மூன்று பேரும் காரில், மாா்க்கம்பட்டியில் நடந்த துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு ஈரோடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை வாய்க்கால் மேட்டுப்புதூா் அருகே காா் எதிா்பாராத விதமாக சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பூபதி காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த திருமூா்த்தி, மனைவி பத்மாவதி இருவரும் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.