புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கரோனா விதிமீறல்கள் குறித்து ஆய்வு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் கரோனா விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 8:26 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் கரோனா விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

நாட்டில் கரோனா இரண்டாவது அலை படிப்படியாகக் குறைந்த நிலையில், மூன்றாவது அலை வராமல் தடுக்கும் வழிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. திருப்பூா் மாவட்ட சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அக்தாப் ரசூல் முத்தூா் பகுதியில் புறக்காவல் நிலையத்தில் கரோனா பரிசோதனைப் பணி, உணவகங்களில் உணவு தயாரிப்பு, கடைகள், வா்த்தக நிறுவனங்களில் முகக் கவசப் பயன்பாடு, சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது முகக் கவசம் அணியாத 11 பேருக்குத் தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலா் வே.முருகன், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரசாத்தாமரைக்கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் இந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.