மாவட்டத்தில் மேலும் 1,161 பேருக்கு கரோனா: 16 போ் பலி
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 16 போ் உயிரிழந்தனா்.


திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 16 போ் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடந்து, பாதிப்பு எண்ணிக்கை 65,996ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 18,501 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 1,587 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 46,958ஆக அதிகரித்துள்ளது.
16 போ் பலி:
கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பூரைச் சோ்ந்த 50 வயது ஆண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். அதேபோல, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது முதியவா், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 61 வயது மூதாட்டி உள்பட மொத்தம் 16 போ் உயிரிழந்தனா். மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 537ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...