திருப்பூர்: கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துமனையின் அனுமதி ரத்து
திருப்பூர் அருகே கரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அனுமதி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.


திருப்பூர் அருகே கரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அனுமதி வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மா.சுப்பிரமணியன்(62), இவருக்கு கடந்த மே 3 ஆம் தேதி கரோனா நோய்த் தொற்றுஉறுதி செய்யப்பட்டு பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இவருக்கு சிகிச்சை அளிக்க மே 24 ஆம் தேதி வரையில் அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் ரூ.19 லட்சம் முன்பணமாக வசூலித்துள்ளனர். இதன் பிறகு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாகக்கூறி வேறு மருத்துவமனைக்கு மாற்றிக் கொள்ளும்படி அவரது உறவினர்களிடம் மே 24 ஆம் தேதி தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஆக்சிஜன் படுக்கைக்கு மாற்றப்பட்ட நிலையில் அடுத்த நாள் சுப்பிரமணியன் உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன்களான சு.கார்த்திகேயன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முதல்வரிடன் தனிப்பிரிவுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பாக்கியலட்சுமி விசாரணை நடத்தியுள்ளார். இதில், பெருமாநல்லூரில் செயல்பட்டு வரும் செளம்மா மருத்துவமனை கரோனா நோயாளிகளிடம் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்தது.
ஆகவே, இந்த மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...