92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தாராபுரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்ட பொதுமக்கள்

தாராபுரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்ட பொதுமக்களால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:19 pm

DIN

தாராபுரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்ட பொதுமக்களால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தாராபுரம் அலோசியஸ் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த 2 நாள்களாக கட்செவி அஞ்சலில் தகவல்கள் பரவின. இந்த நிலையில், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதலே பள்ளி முன்பாகத் திரண்டனா்.

இதன் பிறகு நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கினா். இதனிடையே, தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்ததால் கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.