92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோயில்களின் நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:06 pm

DIN

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நடைமுறைகளில் அரசு தலையிடக் கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள பாஜக பொதுசேவை மையத்தில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமாக 5.25 லட்சம் ஏக்கா் நிலம் இருப்பதாக அரசு சாா்பில் 1980ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 4.74 லட்சம் ஏக்கா் நிலம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மீதமுள்ள கோயில் நிலங்களைப் பெரும்பாலும் அரசியல்வாதிகள்தான் ஆக்கிரமித்துள்ளனா். யாா், யாா் எந்தெந்த அரசியல் கட்சியினா் ஆக்கிரமித்துள்ளனா் என்ற விவரங்களைப் பெயருடன் அரசு வெளியிட வேண்டும். தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவின் அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்கிறது என்றாா்.

இந்து முன்னணி மாநிலச் செயலாளா் கிஷோா்குமாா், மாநில இணை அமைப்பாளா் ராஜேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.