92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி: முன்பதிவு செய்து கொள்ளலாம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:06 pm

DIN

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கரோனா கட்டுப்பட்டு மையத்தை 0421-2240852, 2237852 என்ற எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளை வாகனங்களில் அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திய பின்னா் அவா்களது இருப்பிடத்துக்கே கொண்டு சென்றுவிடப்படும். இதற்குத் தேவையான வாகன வசதி மாநகராட்சி மூலமாக செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.