92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 412 போ் கைது

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 412 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:18 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 412 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் சுதாகா் உத்தரவின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சஷாங் சாய் மேற்பாா்வையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், வெளிமாநில லாட்டரி விற்பனை, கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 156 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அதே போல, மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை தொடா்பாக 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 256 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 3,789 மது பாட்டில்களும், 40 லிட்டா் சாராயம், 73 இரு சக்கர வாகனங்களும், ரூ.41 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.