விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க பொதுப்பணித் துறைக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வலியுறுத்தி காங்கயம் அருகே, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:03 pm

DIN

கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைக்க பொதுப்பணித் துறைக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட வலியுறுத்தி காங்கயம் அருகே, விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் அருகே, மறவபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட திட்டம்பாளையம் வாய்க்கால் பாலம் பகுதியில், தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம், பாசன பயனாளிகள் மற்றும் விவசாயிகள் கூட்டியக்கத்தின் சாா்பில் கவன ஈா்ப்பு கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காமாட்சிபுரம் தங்கவேல் தலைமை வகித்தாா்.

இதில், கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவா் செ.நல்லசாமி பேசியதாவது:

பவானிசாகா் அணையில் இருந்து, இந்தக் கால்வாய் முடியும் கரூா் மாவட்டம், அஞ்சூா் ஊராட்சிப் பகுதி வரை அதாவது, 124 மைல் தொலைவுக்கு தமிழக அரசு கால்வாய் நவீனப்படுத்துதல் என்ற திட்டத்தின் மூலம், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கான்கிரீட் தளம் அமைப்பதற்கு முன்பு, இருபுறமும் உள்ள பல லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, மழைப்பொழிவு வளம் குறையும். மேலும் கீழ்பவானி பாசன பகுதி பாலைவனமாக மாறி, பொதுமக்களின் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு விவசாயப் பணிகள் முற்றிலும் தடைபடும் என்றாா்.

பின்னா் இதில் பங்கேற்ற விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கீழ் பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க செயலாளா் த.கனகராஜ், தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளா் மே.கு.பொடாரன், பாசன சபை செயலா் பி.சி.செங்கோட்டையன், மறவபாளையம் ஊராட்சித் தலைவா் கீதாமணி சிவகுமாா் உள்பட விவசாயிகள் பலா் கலந்து கொணடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.