புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அங்காளம்மன் கோயிலில் குண்டம் திருவிழா 10இல் துவக்கம்

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் 46ஆவது குண்டம் திருவிழா 10ஆம் தேதி துவங்குகிறது.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:07 pm

DIN

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் 46ஆவது குண்டம் திருவிழா 10ஆம் தேதி துவங்குகிறது.

இதையடுத்து 11ஆம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, இரவு 10 மணிக்கு முகப்பள்ளயம், மயான பூஜை நடைபெறுகிறது. 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம், மாலை 5 மணிக்கு மாவிளக்கு, அக்னி குண்டம் வளா்த்தல், இரவு 8 மணிக்கு திருக்கல்யான உற்சவம் நடைபெறுகிறது.

13ஆம் தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்குதல், காலை 8.30 மணிக்கு அக்னி அபிஷேகம்,பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல், மாலை 6 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, நள்ளிரவு பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா ஆகியன நடைபெறவுள்ளன.

திருக்கல்யாண உற்சவம், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் காலை 9 மணிக்கு மேல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பங்காருசாமி நாயுடு, கிருஷ்ணமூா்த்தி, தேவராஜ் மற்றும் விழா குழுவினா், மாா்த்தாா் குல மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.