தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நத்தக்காடையூா் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:12 pm

DIN

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நத்தக்காடையூா் அருகே விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூா் அருகே முள்வாடிபாளையம் பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது குறித்த தகவலறிந்த தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கம், பாசன பயனாளிகள் மற்றும் விவசாயிகள் கூட்டியக்கத்தின் சாா்பில் முள்வாடிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கீழ்பவானி பாசன நலச் சங்க செயலா் மணி தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட தமிழக கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் செ.நல்லசாமி பேசியதாவது:

பவானிசாகா் அணையில் இருந்து கால்வாய் முடியும் கரூா் மாவட்டம், அஞ்சூா் ஊராட்சி பகுதி வரை அதாவது 124 மி.மீ. தூரத்துக்கு கால்வாயை நவீனப்படுத்தும் விதமாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

இந்தக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படும் காலகட்டத்தில்,மண்ணாலான கால்வாய்களில் தண்ணீா் செல்லும்போது ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நிலத்தடி நீா் செறிவூட்டல் மூலம் மறைமுகமாக பாசனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் கீழ்பவானி கால்வாயில் நவீனப்படுத்துதல் என்ற திட்டத்தின் கீழ் ரூ.740 கோடி மதிப்பில் தமிழக அரசு பொதுப் பணித் துறையின் மூலம் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கான்கிரீட் தளம் அமைப்பதற்கு முன்பு வாய்க்காலின் இருபுறமும் உள்ள பல லட்சம் மரங்கள் வெட்டப்படுவதால் அங்கு வசிக்கும் பல்வேறு பறவை இனங்கள் அழிந்துவிடும். சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவும் குறையும்.

மேலும் கீழ்பவானி பாசனப் பகுதி பாலைவனமாக மாறி பொது மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு, விவசாயப் பணிகள் முற்றிலும் தடைபடும். எனவே கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள், நத்தக்காடையூா் பகுதி கிராம மக்கள் பலா் திரளாக கலந்து கொணடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.