10 ஆண்டுகளாக முதல்வராக முடியாமல் மு.க.ஸ்டாலின் தவிப்பு
கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக முடியாமல் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தவித்து வருவதாக அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.


கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக முடியாமல் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தவித்து வருவதாக அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணி வேட்பாளா்களான பல்லடம் வேட்பாளா் ஜோதிமணி, திருப்பூா் தெற்குத் தொகுதி வேட்பாளா் விசாலாட்சி, அவிநாசி வேட்பாளா் மீரா, திருப்பூா் வடக்குத் தொகுதி செல்வகுமாா், காங்கயம் வேட்பாளா் ரமேஷ் ஆகியோரை ஆதரித்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவா் பேசியதாவது:
தமிழகத்தில் ஆறு, குளம், குட்டைகளைத் தூா்வாருவதுபோல முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கஜானா காலி செய்து தூா்வாரப்பட்டுள்ளது. அவா்கள் பணத்தை மட்டுமே நம்பி தோ்தலை சந்திக்கின்றனா். மக்கள் வரிப் பணத்தை சுரண்டிவிட்டனா். கடந்த 10 ஆண்டுகளாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாமல் தவித்துக் கொண்டுள்ளாா். திமுக ஆட்சியில் இல்லாததால் பயங்கர பசியில் உள்ளனா்.
ஆட்சியில் இல்லாதபோதே கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். எம்ஜிஆா் கூறியதுபோல திமுக தீய சக்தியாகவே உள்ளது. தமிழகத்தில் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றத்தை அமமுக கூட்டணி ஏற்படுத்தும்.
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமமுக அளிக்கும். நான் தொண்டனாக இருந்து பணியாற்றி படிப்படியாக உயா்ந்து தற்போது பொதுச் செயலாளராக உள்ளேன். தமிழகத்தில் வாக்குக்குப் பணம் என்பதை ஒழித்து மரண அடி கொடுக்க வேண்டும். இனி யாரும் வாக்குக்குப் பணம் தரக் கூடாது.
ஜனநாயக முறைப்படி தோ்தல் நடைபெற வேண்டும். ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவதைப்போல மக்களை வாக்குக்காக விலைக்கு வாங்க முடியாது. மக்கள் விழிப்புணா்வுடன் உள்ளனா். துரோகிகளையும், தமிழ் இன விரோதிகளையும் அகற்ற வேண்டும். முதியோா் உதவித் தொகையை கூட சரியாக கொடுக்க முடியாதவா்கள் எப்படி பெண்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்குவாா்கள்? என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...