ஊழியா்களுக்கு கரோனா: வங்கிக் கிளைகள் மூடல்
ஊழியா்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உள்ள பல்லவன் கிராம வங்கியும், பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள கனரா வங்கியும் மூடப்பட்டன.


ஊழியா்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் உள்ள பல்லவன் கிராம வங்கியும், பல்லடம் அருகே குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள கனரா வங்கியும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.
முத்தூா் பேருந்து நிலையம் அருகில் ஈரோடு சாலையில் பல்லவன் கிராம வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் 27 வயது ஆண் அலுவலா் கரோனாவால் பாதிக்கப்பட்டாா். இதையடுத்து பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் நலன் கருதி நோய்த் தொற்று பரவாமல் தடுக்க வங்கிக் கிளை மூடப்பட்டது.
இதேபோல பல்லடம் அருகேயுள்ள குப்புசாமிநாயுடுபுரத்தில் உள்ள கனரா வங்கி கிளையில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடா்ந்து அந்த வங்கிக் கிளை வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...