ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தாராபுரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை

தாராபுரத்தில் இடி, சூறாவளிக்காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது. 

News image
தாராபுரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை.
Updated On :7 மே 2021, 1:56 pm

DIN

தாராபுரத்தில் இடி, சூறாவளிக்காற்றுடன் வெள்ளிக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், தாராபுரத்தின பல்வேறு பகுதிகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் சுமார் ஒன்றரை மணி நேரம் இடி, சூறாவளிக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 

தாராபுரம் நகரில் மணியம்மை நகர், சின்னகடைவீதி, பெரியகடைவீதி, பெரியார் திடல் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனைச்சுற்றியுள்ள தளவாய்பட்டணம், அலங்கியம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. 

இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். அதே போல், நகரில் சில பகுதிகளில் ஏற்பட்ட மின்தடையால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.