காங்கயத்தில் பதற வைத்த படிக்கட்டுகள்
காங்கயத்தில், தரைத் தளத்தை விட்டு விலகியிருந்த படிக்கட்டுகள் அதிகாரிகளைப் பதற வைத்தன.


காங்கயத்தில், தரைத் தளத்தை விட்டு விலகியிருந்த படிக்கட்டுகள் அதிகாரிகளைப் பதற வைத்தன.
காங்கயம் அருகே, குள்ளம்பாளையத்தில் அரசு மருந்துக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மருந்துக் கிடங்கினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி, மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, மருத்துக் கிடங்கின் பட்டிக்கட்டுகள் தளத்தோடு இணையும் இடத்தில், ஒரு ஆள் நழுவி விழும் அளவுக்கு இடைவெளி இருந்தது. இதனால், மருந்துக் கிடங்கிற்குள் செல்வதற்கு படியில் ஏறிய அதிகாரிகள், படி முடியும் இடத்தில் திடீரென பள்ளம் இருந்ததால், சற்றுத் தடுமாறி, பின்னர் கிடங்கின் உள்ளே நுழைந்தனர்.
இந்தப் படிக்கட்டுகளை சரி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...