புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூர் மாவட்டத்தில் 23.66 லட்சம் வாக்காளர்கள்

திருப்பூர் மாவட்டத்தில் 23.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை திங்கட்கிழமை வெளியிடுகிறார் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித்.

Updated On :1 நவம்பர் 2021, 8:31 am

DIN

திருப்பூர் மாவட்டத்தில் 23.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2022-ன்படி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எஸ்.வினீத் வெளியிட்டுப் பேசியதாவது: வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,512 வாக்குச்சாவடிகளில் 23 லட்சத்து 66 ஆயிரத்து 211 வாக்காளர்கள் உள்ளனர். இதில்,11 லட்சத்து 68 ஆயிரத்து 682 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 97 ஆயிரத்து 236 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 293 பேரும் அடங்குவர்.

மேலும், கடந்த மார்ச் 19 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தொடர் திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியல் விபரங்களில் திருத்தம் மேற்கொள்வதற்காக பெறப்பட்ட 6,591 கோரிக்கைகளின் பேரிலும், முகவரி மாற்றம் செய்ய பெறப்பட்ட 648 கோரிக்கைகளின் பேரிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.