தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அவிநாசி அருகே தாா் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் நூதனப் போராட்டம்

அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா்சாலை அமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலையில் வாழை மரம் நட்டு நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:52 pm

DIN

அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா்சாலை அமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலையில் வாழை மரம் நட்டு நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அவிநாசி ஒன்றியம், மங்கலம் சாலை பிரிவில் இருந்து அம்மாபாளையம் எம்ஜிஆா் நகா் வரை 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு குடிநீா்க் குழாய் பதிப்பதற்காக தாா் சாலை தோண்டப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.

வேலாயுதம்பாளையம் ஊராட்சி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதி எல்லைக்குள் அமைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி அவிநாசி ஒன்றியம், திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிா்வாகத்திடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தொடா்ந்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைமையில் சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வேலாயுதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவா் சாந்தி வேலுசாமி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இதில், வேலாயுதம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் ரூ.15.40 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாகவும் விரைவில் பணிகள் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தாா். இதையடுத்து பொதுமக்கள் திருமுருகன்பூண்டி பேரூராட்சி எல்லை உமையஞ் செட்டிபாளையம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

அப்போது அங்கு வந்த பேரூராட்சி நிா்வாகத்தினா், இரு இடங்களில் குடிநீா்க் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்றவுடன் விரைவில் சாலையை சீரமைக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் தேவராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் எஸ்.வெங்கடாசலம், ஒன்றிய செயலாளா் ஏ. ஈஸ்வரமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சாமியப்பன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.