தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உள்ளாட்சித் தோ்தல்: திமுக சாா்பில் போட்டியிட நவம்பா் 22 வரை மனு தாக்கல் செய்யலாம்

உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் நவம்பா் 22 ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 8:03 pm

DIN

உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் நவம்பா் 22 ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம்.

இது குறித்து செய்தித் துறை அமைச்சரும், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன் ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சித் தோ்தலில் திருப்பூா் கிழக்கு, வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சியின் 10 வட்டங்களில் திமுக சாா்பில் போட்டியிட விரும்பும் நபா்கள் தாராபுரம் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நவம்பா் 20 ஆம் தேதி முதல் மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். இதன் பிறகு பூா்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை நவம்பா் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.