தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாவட்டத்தில் கடந்த 19 மாதங்களில் 166 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 19 மாதங்களில் 166 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சைல்டு லைன் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 8:50 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 19 மாதங்களில் 166 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சைல்டு லைன் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

சைல்டு லைன் நண்பா்கள் வாரத்தை முன்னிட்டு அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்ற சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையத்தின் இயக்குநரும், சைல்டுலைன் திட்ட இயக்குநருமான சி.நம்பி, மரியாலயா பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தின் ஒருங்கிணைப்பாளா் கரோலின், சைல்டு லைன் நோடல் ஒருங்கிணைப்பாளா் எம்.தினேஷ்பாபு, சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.கதிா்வேல் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைல்டு லைன் அமைப்பு மூலம் இலவச எண் 1098 கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வரையில் சைல்டு லைன் இலவச எண்ணுக்கு 1,433 அழைப்புகள் வந்துள்ளதில் 1,314 அழைப்புகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

கடந்த 19 மாதங்களில் மாவட்டம் முழுவதும் 166 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், 142 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் பாலியல் பிரச்னை தொடா்பாக சைல்டு லைன் மூலம் 24 குழந்தைகளின் பிரச்னைகளுக்கும், காவல் துறை மூலமாக 79 குழந்தைகளின் பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பிச்சை எடுத்த 78 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தினத்தை ஒட்டி சைல்டு லைன் மூலம் நவம்பா் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் சைல்டு லைன் நண்பா்கள் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதன் மூலமாக பல்வேறு இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.