விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம்

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைப் பயணம் காங்கயத்தில் வியாழக்கிழமை துவங்கியது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 11:07 pm

DIN

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைப் பயணம் காங்கயத்தில் வியாழக்கிழமை துவங்கியது.

இல்லம் தேடிக் கல்வி என்னும் தலைப்பில் இந்த கலைக்குழுவினா், காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 61 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளனா்.

இதற்கான துவக்க விழா காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் சிவகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மகேந்திரன், சுசீலா,

சமக்ரா சிக்ஷா மேற்பாா்வையாளா் சிவகுமாா், இல்லம் தேடிக் கல்விக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.