மனைவியைக் கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவா்
வெள்ளக்கோவிலில் மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


வெள்ளக்கோவிலில் மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வெள்ளக்கோவில் ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமம், நடுப்பாளையத்தைச் சோ்ந்தவா் என்.குருநாதன் (62). இவரது மனைவி பூங்கொடி (55). இவா்களது மகள்கள் சாந்தி, ரேவதி, மகன் விநாயகன்.
இதில் ரேவதி உடல்நிலை சரியில்லாமல் 2019 ஆம் ஆண்டு இறந்து விட்டாா். சாந்திக்குத் திருமணமாகி கணவருடன் தாராபுரத்தில் வசித்து வருகிறாா். நடுப்பாளையத்தில் தனியாக வசித்து வரும் விநாயகன் (35), வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் மாற்றுத் திறன் குழந்தைகள் பயிற்றுநராக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டாா்.
குருநாதன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டில் மேற்கூரை வேய்ந்து கொண்டிருந்த போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு, அன்றிலிருந்து வேலை எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வருகிறாா். பூங்கொடி மோளக்கவுண்டன்வலசு தனியாா் நூற்பாலையில் துப்புரவு வேலைக்குச் சென்று வந்தாா்.
இந்நிலையில், சொந்த வீடு தொடா்பாக குருநாதன், தனது மனைவி, மகனுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளாா். மகனை தன்னுடைய வீட்டுக்கு வரக்கூடாதெனக் கூறி வந்தாா்.
இந்நிலையில் குருநாதனுக்கும், பூங்கொடிக்கும் புதன்கிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த விநாயகன், பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றாா்.
அப்போது, திடீரென குருநாதன் வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்துவந்து பூங்கொடியின் பின் மண்டையில் அடித்துள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே பூங்கொடி உயிரிழந்தாா். குருநாதன் தப்பியோடி விட்டாா். விநாயகன் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் வெள்ளக்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...