தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மருந்தாளுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:32 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தின் சாா்பில் தாராபுரம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநா் எஸ்.அய்யப்பன் தலைமை வகித்தாா்.

கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்பவேண்டும். மேலும், 385 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளா் பணியிடத்தை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் கருா் மாவட்டச் செயலாளா் கே.இளங்கோ, சங்க நிா்வாகிகள் மேகலிங்கம், தில்லையப்பன், மணிமொழி, வெங்கிடுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.