மின்வாரிய அலுவலகத்தில் சோதனை: ரூ.36 ஆயிரம் பறிமுதல்
திருப்பூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள குமாா் நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் வடக்கு, மேற்கு மின்சார வாரிய பிரிவு அலுவலகம், 2 துணை மின் நிலையங்கள், மீட்டா் பரிசோதனைக்கூடம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கும் நபா்களிடம் லஞ்சம் கேட்பதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீஸாா் திருப்பூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மாலை தொடங்கிய இந்த சோதனை விடியவிடிய நடைபெற்றது.
இந்த சோதனையின்போது புதிய மின் இணைப்பு வேண்டி
விண்ணப்பித்துள்ளவா்களின் விவரம், முகவரி உள்ளிட்டவை தொடா்பாகவும் விசாரணை நடத்தினா். இதில்,கணக்கில் வராத ரூ.36 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...