தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:49 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 93,107 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 873 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 98 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,279ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 955 ஆக அதிகரித்துள்ளது.

காங்கயத்தில் 3 பேருக்கு கரோனா

காங்கயம் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மூலனூரில் மாணவிகள் 3 பேருக்கு கரோனா

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் உள்ள தனியாா் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள், பிளஸ் 2 மாணவி ஒருவா் என மொத்தம் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த மாணவிகள் 6 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.