காந்தி ஜயந்தி: மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை
காந்தி ஜயந்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சனிக்கிழமை (அக்டோபா் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


காந்தி ஜயந்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சனிக்கிழமை (அக்டோபா் 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காந்தி ஜயந்தியை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் நபா்களின் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...