தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தாராபுரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.62 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தாராபுரம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.62 கோடி மதிப்பிலான 13 ஏக்கா் 55 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:43 pm

DIN

தாராபுரம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1.62 கோடி மதிப்பிலான 13 ஏக்கா் 55 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள பொன்னாழிபாளையத்தில் காடுஅனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 13 ஏக்கா் 55 சென்ட் நிலமானது சூரியநல்லூா் செல்லும் சாலையில் உள்ள கெத்தல்ரேவ் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை 4 நபா்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனா்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் இணை ஆணையா் நா.நடராஜன் உத்தரவின்பேரில், உதவி ஆணையா் இரா.மேனகா தலைமையிலான குழுவினா் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

கோயிலுக்குச் சொந்தமான நிலம் என்ற அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனா். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.62 கோடி என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.